மலேசியர்களின்
வாசிப்புப் பழக்கத்தை ஆராய 1982-இல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு காட்டிய புள்ளி விவரம் நம்மை வெட்கித் தலை குனிய வைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில், நாம்
ஓராண்டில் சராசரி ஒரு பக்கமே வாசிக்கின்றோம். மேலும் மலேசியாவில் குறைவான நூல்களே வெளியிடப்படுகின்றன. 1987-இல்
கொரிய நாடு
44 288 நூல்களை வெளியீடு செய்த வேளையில் நம் நாட்டில்
3 000 நூல்களே வெளியீடு கண்டுள்ளன. இந்த வருந்ததக்க நிலையை உடனடியாகக் களைதல் அவசியமாகும். அதற்காகத்தான் அரசாங்கம் வாசிப்புப் பழக்கத்தை ஒரு கட்டாயமாக மாற்றியுள்ளது. இதனால்தான் அரசாங்கம் பள்ளி மாணவர்களிடம் “நீலாம்” என்ற ஒரு வாசிக்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்திவுள்ளது. எதிர்காலத்தில் பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கூடங்களில் வாய்ப்புப் போன்ற நடவடிக்கைகளுக்கு வாசிப்பை ஒரு கட்டாய விதியாக்கிவிடுவார்கள்.
‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை’
என்று நம்முடைய நான்முகனார் தமது திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். ஒருவனுக்கு அழிவு இல்லாத செல்வமும் செல்வத்திலேயே சிறந்த செல்வமும் கல்வியே என்று இவர் இந்தக் குறளின் வழி நமக்குச் சொல்கிறார். மேலும் கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் இத்தகைய சிறப்புடைய ஒரு செல்வம் அல்ல என்றும் இவர் கூறியுள்ளார். நமக்கு இப்படிப்பட்ட ஒரு சிறந்த செல்வமான கல்வி எப்படிக் கிடைக்கிறது? நாம் வாசிப்பதனால்தானே கல்வி கேள்விகளில்
சிறந்து விளங்க முடிகிறது. இப்படிப்பட்ட சிறந்த கல்வி வாசிப்புத் திறனால்தானே வளர்கிறது. கல்வியைக் கற்பதால் நமக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிறது. நாம் வேலை செய்வதால் ஊதியம் கிடைக்கிறது. மேலும் நம்முடைய எதிர்காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்கான மூல காரணமே நாம் சிறுவயதிலிருந்து பின்பற்றிக் கொண்டிருக்கும் வாசிப்புப் பழக்கமே ஆகும்.
வாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயது முதல் நாம் நம்முடைய இளைய தலைமுறைக்குப் பழக்கப் படுத்தவேண்டும். இந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே முக்கியப் பங்காற்ற வேண்டும்.
சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் திறமையை உணர்ந்து அவர்கள் விரும்பிப் படிக்கும் நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்கள் படிப்பதற்கான சிறந்த சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு வயது பிள்ளைகளுக்கு வாசிக்கத் தெரியாது.
இவர்களுக்குப் பெற்றோர்களே எழுத்துக்களை அறிமுகப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் ஒரு பாடப்பகுதியை வாசிக்கும்போது, அவர்கள் சொல் உச்சரிப்பில் பிழை செய்தால் ஆசிரியர்கள் அப்பிழையைத் திருத்த வேண்டும்.
இவ்வழிகளைச் சிறுவயது முதல் குழந்தைகளிடம் பின்பற்ற வைத்தால் நாளடைவில் குழந்தைகளுக்குப் வாசிப்பில் ஆர்வம் தென்படும். சிறு தென்னங்கன்று ஒன்று இருக்கும் போது நாம் அதற்குத் தினமும் நீர் ஊற்றி வந்தால் அத்தென்னங்கன்று தென்னைமரமாகியவுடன் நாம் ஊற்றிய நீரை இளநீராகக் கொடுக்கிறது. அதுபோலத்தான் சிறுவயது முதல் ஒரு பிள்ளையை வாசிப்புத் திறனுடன் வளர்த்தால் நாளடைவில் ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளராக வானொலி அறிவிப்பாளராக மற்றும் ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும் உருவெடுக்க
வாய்ப்பு அதிகம் உள்ளது.
நாம் வாசிப்பதற்கு நாளிதழ்,
கதைப் புத்தகம்,
வார மாத இதழ்கள், போன்றவை நிறைய உள்ளன.
இதைத் தவிர்த்துக் கணினியின் மூலமாகவும் நாம் வாசிக்கலாம். இணையத்திலிருந்து பல தகவல்களை வாசிப்புத்திறனாலேயே தெரிந்து கொள்கிறோம். நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைச் சிலர் முக்கியப் பணியாகக் கருதுகின்றனர். காலையில் எழுந்தவுடன் நாளிதழைப் படிக்கவில்லை என்றால் அதைப் பேரிழப்பாகக் கருதுவர்.
இன்னும் சிலரைப் பார்த்தால் கதைப் புத்தகமே கதியாய்க் கிடப்பர். இத்தகையோரிடம் அறிவு மேலோங்கி இருக்கும்.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
என்பதைப்
போல், மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல் மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்குத்தான் நமக்கு அறிவும் வளரும். நமது அறிவு வளர்ந்தால் கிணற்றுத் தவளையைப் போல் இல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். மேலும் நாம் வாசிப்பதால் நம்முடைய சொல் உச்சரிப்பும் வளரும்.
காலத்தையும் பயனுள்ள வழியில் செலவழிக்கலாம்.
இறுதியாக,
நாம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொண்டால் நாம் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
டாக்டர் காதர் இப்ராகிம் போல் ஒரு நல்ல பேச்சாளராக ஆகலாம்.
மேலும் நூலை நம்முடைய தோழனாக மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
வாசிப்புப் பழக்கம் நமது நல்ல பண்பாக அமைகிறது.
வாசிப்புப் பழக்கத்தின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள நூல்கள் பெரும்பங்காற்றி வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே,
நாம் சிறு வயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும்.
hi everyone..thiz is my blog
ReplyDelete