
எறும்பு குழுவாக வாழும் ஆறுகால்கள்
கொண்ட ஒருபூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு
அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக்
கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள
எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப்
பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து
கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.
உலகின்
எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப
வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள்
சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள
இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக
அறியப்படுகிறது.
இவ்வாறு மிகக்கூடிய
எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக
உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின்
மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு
ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே
எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.
பொதுவாக எறும்புகளைக் காண
முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி
வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும்நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே
(100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக
வளர்ச்சி பெற்றன.
No comments:
Post a Comment