Friday, 11 September 2015

மழை

மழை கடவுளால் நமக்களிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். மனிதர்கள், பிராணிகள் மற்றும் தாவரங்கள் செழிப்புடன் உயிர்வாழ மழைநீர் உற்ற தோழனாக இருந்து தோள் கொடுக்கிறது. நமது நாட்டில் இயற்கை வளங்கள் அதிகம் இருப்பதற்கு மழை ஒரு முக்கியக் காரணமாக விளங்குகின்றது. அறிவியல்பூர்வமாகப் பார்த்தோமானால் மழை, கடல் நீரில் இருந்துதான் உற்பத்தி ஆகிறது என்பதை நாம் அறிய முடியும். வெப்பமான சூழலில் கடல் நீர் நீராவியாக மாறி வானத்திற்குச் சென்றுவிடுகிறது. வானத்தை அடைந்தவுடன் நீராவி மேகமாக மாறிவிடுகிறது. மேகக்கூட்டங்களுக்கிடையே ஏற்படும் உரசல்களினால் மேகம் கலைந்து மழையாகப் பொழிகிறது. பூமியை நனைக்கும் இம்மழைநீர் பல நன்மைகளைத் தாங்கி வருகிறது. நாம் மழையின் நன்மையை அறிந்து அதனை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.
 மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் விவசாயத் துறைக்கு மழை பெரும் சேவையாற்றுகிறது. ஒரு நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் மழை பெரும் பங்காற்றுகிறது. விவசாயத் துறையின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி புரிகிறது. மழைநீரின் துணையுடன் செழிக்கும் பயிர்கள் மக்களுக்கு உணவாகி அவர்களை வாழ வைக்கின்றன. இதே பயிர்கள் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தந்து அவர்களின் வயிற்றுப்பசியைப் போக்குகின்றன. உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் நாட்டுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கின்றது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல இடங்களில் மழை பெய்யாததால் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையில் மடிகின்றனர். மழை ஒரு நாட்டின் வளப்பத்தை நிர்ணயிக்கின்றது.
 ஓர் இடத்தின் தட்பவெப்ப நிலை மழையைச் சார்ந்துள்ளது. மழை பொழிவதால் பூமி குளிர்கிறது; பெய்யாவிட்டால் பூமி வெப்பமாகிறது. அளவுக்கதிகமான வெப்பம் பயிர்களை வாடச் செய்கிறது; நிலத்தைப் பிளக்கச் செய்கிறது; மனிதர்களுக்குப் பல கேடுகளை விளைவிக்கிறது. வெப்பமான சூழல் மனிதர்களுக்குப் பல தோல் வியாதிகளைத் தருகிறது. இவ்வெப்பத்ததைத் தணிக்கும் சக்தி மழைக்கு உள்ளது. மழை பெய்வதால் பூமி குளிர்ச்சியாய் இருக்கும். குளிர்ச்சியான நாடுகளுக்கு நிறைய சுற்றுப்பயணிகள் வருவார்கள். இதனால் நாட்டின் வருமானமும் பெருகும். நாடு குளுமையாகவும் வளமுடனும் இருப்பதால் தாவரங்கள் செழிப்புடன் வளர்கின்றன.
ஒரு மனிதன் புவியில் சிறப்புடன் வாழ்வதற்குக் கைகொடுப்பது நீர்தான். உலகில் நீரில்லாமல் வாழ முடியாது. நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கு நீர் பயன்படுகிறது. இந்நீரை நாம் மழையிலிருந்து பெறுகின்றோம். வாகனங்களைக் கழுவுதல், குளித்தல், குடித்தல் மற்றும் துணிமணிகளைத் துவைத்தல் போன்ற தேவைகளுக்கு மழை நீர் தேவைப்படுகின்றது. மழை நீரைச் சேகரித்துத் தாவரங்களுக்கும் பாய்ச்சலாம்.
 2020 இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த இலக்கை அடைய நம் நாடு விவசாயத் துறையிலிருந்து தொழிற்துறைக்கு மாறி வருகிறது. இதனால், நாட்டில் தொழிற்சாலைகள் நேற்று மழையில் முளைத்த காளான்கள் போல் பெருகிவருகின்றன. இத்தொழிற்சாலைகளை இயக்குவதற்கு மின்சாரம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைக்கட்டுகளும் மழையையே நம்பியுள்ளன. அணைக்கட்டுகளில் நீர் நிரம்பி இருந்தால்தான் மின்சாரத்தை இலகுவாக உற்பத்திச் செய்ய முடியும். நம் அன்றாட வேலைகளைச் சரிவரச் செய்வதற்கு ¢ன்சாரம் தேவை. இதன் விளைவாக உற்பத்தி குறைந்துவிடும். நாட்டின் பொருளாதாரமும் சரிவடையும். ஆகவே, மழை நீரை நம்பியுள்ள மின்சார உற்பத்தி  நாட்டின் வளர்ச்சிக்கு மிகமிக அவசியமாகும்.

 சுருங்கக்கூறின், மழை நீர் நமக்குப் பல நன்மைகளைத் தருகிறது. மழை நீர் நமக்கு உற்ற தோழனாக விளங்குகிறது. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’, என்பது பெரியோர் வாக்கு. ஆகவே, மழைநீரை நாம் ஒரு போதும் வீணாக்கக்கூடாது. மழைநீரை நாம் பல தேவைகளுக்குப் பயன்படுத்தினால் குடிநீர் கட்டணத்தைக் குறைத்துப் பணத்தைச் சிக்கனப்படுத்தலாம். ஆண்டு முழுவதும் மழை பொழியும் இந்நாட்டில் வாழும் நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். மழைநீரை நன்முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கையை மேலும் செழிக்கச் செய்வோம்.

10 comments:

  1. Extrodinary explanation about rain👏👏

    ReplyDelete
  2. Casinos Near Harrah's Casino, Montgomery | MapYRO
    Casino 평택 출장안마 Near Harrah's 충주 출장샵 Casino in Montgomery, AL with MapYRO 울산광역 출장샵 users can now easily see your location and check 원주 출장샵 your 계룡 출장마사지 location.

    ReplyDelete
  3. So damn long and vast, pls shrink it

    ReplyDelete
  4. damn teacher will doubt me if i write this essay

    ReplyDelete
  5. Navratri party Navaratri katturai katturai in Tamil

    ReplyDelete
  6. fhbbbbbbbbbbbbbbbbbbbbbgzz

    ReplyDelete